திருவெறும்பூர் நாட்டுத் துப்பாக்கி வைத்த ரவுடி கைது

964பார்த்தது
திருவெறும்பூர் நாட்டுத் துப்பாக்கி வைத்த ரவுடி கைது
திருவெறும்பூர் அருகே அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த ரவுடியை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து பணியில் சென்ற பொழுது அந்த பகுதியில் சந்தேக படும்படியாக நின்றுகொண்டு இருந்த திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த பொந்துளி மகன் ரவுடி முருகானந்தம் (எ) மூல முருகானந்தம் (28) என்பவனை பிடித்து விசாரித்த பொழுது அவன் அரசு அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் முருகானந்தத்தை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவனிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவனிடம் விசாரணை செய்தபோது அவனுக்கு திருவெறும்பூர், பொன்மலை, புதுக்கோட்டை நவல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்கள் பல வழக்குகள் உள்ளதும் பொன்மலை காவல் நிலையத்தில் ரவுடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது,

அதன் அடிப்படையில்திருவெறும்பூர் போலீசார் முருகானந்தத்தை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சியில் மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி