திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று (ஜூன் 6) வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் திருவரம்பூர் போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.