திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் கதிர்வேல் வயது (60). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி கதிர்வேல் சுமார் 15 நாட்களுக்கு முன்பு துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் தனது விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். பில் கலெக்டர் சௌந்தரபாண்டியன் 50000லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்றும். காலி மனைக்கான வரியை தனியாக கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிர்வேல் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் இன்று காலை 11 மணியளவில் துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் சௌந்தரபாண்டியன் வயது (35) என்பவர் கதிர்வேலுவிடமிருந்து 50, 000 லஞ்சம் பெற்றபோது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள், சக்திவேல் பிரசன்னா வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அது தொடர்பாக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.