கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா

84பார்த்தது
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடந்த கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவடைந்தது

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 8 வயது முதல் 14 வயதுடைய சிறு குழந்தைகளும் காண கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த மாதம் 10ம் தேதி முதல்
நேற்று வரை நடந்தது.

இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த முகாமை துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ஷிரிஷ் குமார் துவங்கி வைத்தார்.

இந்த முகாமில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாட்டு பயிற்சி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு ஷிரிஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.

விழாவின் முடிவு நாளான நேற்று மாணவ மாணவிகளுக்கு மரத்தான் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஷிரிஷ் குமார் பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகளும் சிறுவர் சிறுமிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி