பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை

81பார்த்தது
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி 03/06/2024 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி. வி. எஸ் டோல்கேட் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் பங்கேற்கின்றார், கழக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாகவும்முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகங்களில் கழக இருவண்ண கொடியேற்றி முத்தமிழறிஞர் கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும்மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட வார்டு கிளைக் கழக செயலாளர் மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தவறாமல் கலந்து கொள்ளுமாறு திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி