திருச்சியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்

71பார்த்தது
திருச்சியில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம்
தடகள சங்கம் சாா்பில் 96- ஆவது மாநில அளவிலான 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை ஹாமா் த்ரோ, கம்பு ஊன்றித் தாண்டுதல், நீண்ட தொலைவு நடை போட்டி ஆகியன நடைபெற்றன. இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதே போல, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் மொத்தம் 23 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இவற்றில் பங்கேற்பதற்காக சுமாா் 1, 300 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனா், சனிக்கிழமை காலை தொடக்க விழாவும், ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி