திருச்சி விமான நிலையத்தில் அரிய வகை பாம்பு ஆமைகள் பறிமுதல்

77பார்த்தது
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று பாங்காங்கிலிருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் விமானத்தில் திருச்சி வந்தடைந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமைகளில் அரிய வகை பாம்புகள், ஆமைக் குஞ்சுகள், ஓணான்கள் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து ஒரு இடத்தில் பத்திரமாக வைத்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து அதனை பார்த்ததும் அந்த விலங்கினங்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதனை பயணியிடம் கொடுத்து அனுப்பியது யார்? யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக வாஸ்து என்கிற பெயரில் அரிய வகை உயிரினங்களை வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு திருச்சிக்கு கடத்தி வருவதும், சுங்கத் துறையினர் அவற்றை பறிமுதல் செய்து திருப்பி அனுப்புவதும் தொடர்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி