திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டவர் கோவிலில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. கண்ணுடையான் பட்டி கலிங்கப்பட்டி. தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறப்பட்டது.