முசிறி: சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு

84பார்த்தது
முசிறி பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 361 லட்சம் மதிப்பீட்டில் நான்கு சாலைகள் அமைக்கும் பணிக்கு முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பூமி பூஜை செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தா பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளான பாப்பாப்பட்டி முதல் பனங்காடு, பூலாஞ்சேரி முதல் சேருகுடி, தாண்டாம்பட்டி முதல் கருப்பப்பட்டி ஆகிய பகுதிகளிலும் முசிறி ஊராட்சி ஒன்றிய பகுதிகளான மேல வெள்ளூர் பகுதியில் மிகவும் பழுதடைந்த மோசமான சாலைகளை புதுப்பித்து தர பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு கொடுத்ததை தொடர்ந்து
4 தார் சாலைகள் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 361 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிகள் துவங்குவதற்கு முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி