முசிறி அருகே தா. பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 40 வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சந்தித்து கொண்ட முன்னாள் மாணவர்கள்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா. பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியாக இருந்தபோது மாணவ, மாணவிகள் இருபாலரும் ஒன்றாக படித்தனர். தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகருகே தனித்தனியே இயங்கி வருகிறது. இந்தநிலையில் கடந்த 1983 - 1985-ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னாள் மாணவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜோதிதியாகராஜன், திருவேங்கடம், குணசேகரன் விஸ்வநாதன், , தலைமலை உள்ளிட்ட பலர் மாணவர்கள் பயின்ற. நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினர்.
முன்னாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு தொகை வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டனர். அப்போது 40 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் அன்பை பரிமாறி கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.