தமிழகபள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்டாட்லாந்து தேசிய நூலகத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து ஸ்காட்லாந்து மைய நூலகத்தையும், சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டு அங்குள்ள நூலக செயல்பாடுகள் மற்றும் கட்டுமானங்கள் குறித்து கேட்டறிந்தார்.
பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகம் 1699’ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகம் தற்போது இணையதள வசதியின் மூலம் வாசகர்களுக்கு பெரும்பாலான சேவைகளை வழங்கும் நவீன நூலகமாக திகழ்கிறது.
தொடர்ந்து ஸ்காட்லாந்தின் மைய நூலகத்தையும், குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டார்.