திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவள்ளரை ஊராட்சி காளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் நேற்று மாலை திருச்சி துறையூர் சாலையில் டூவீலரில் வந்தபோது சட்டி கருப்பு கோவில் அருகே எதிரே வந்த கிரேன்மீது டூவீலர் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வீரமணியின் கால் எலும்பு முறிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.