விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று(ஆக.27) திருச்சி வந்தார். அப்போது பேட்டி அளித்த அவர்,
எம்ஜிஆர். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிறபோது திமுகவிலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள். அதனால் வெற்றி பெற முடிந்தது. அதன்பிறகு சினிமா மூலம் வந்த தலைவர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் அரசியல் எவ்வளவு கடினமானது; போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். அதில் தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் விஜய் அரசியல் குறித்து நாம் ஒரு கருத்தை சொல்ல முடியும். அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
முருகன் மாநாடு சிறப்பாகவே நடந்தேறி இருக்கிறது. அதில் விமர்சிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை. ஆனால் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் பக்தி இலக்கியங்கள் தொடர்பான போட்டிகள் நடத்தப்படும் என்று சொல்லி இருப்பது பரவலாக ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறது எனக் கூறினார்.