திருச்சி விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

84பார்த்தது
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவிலான தங்கம் கடத்தி வருவது அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்களையும் கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து ரூபாய் 5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருளை கடத்தி வந்ததாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த பயணியை தனியே அழைத்துச் சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதுபோன்று போதைப் பொருள் திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி