திருச்சி: குரூப்-2 தோ்வு.. 8000 பேர் வரவில்லை

84பார்த்தது
திருச்சி: குரூப்-2 தோ்வு.. 8000 பேர் வரவில்லை
திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி, மணப்பாறை, துறையூா் ஆகிய 7 வட்டங்களில் உள்ள 115 தோ்வு மையங்களில் தோ்வெழுத 33 ஆயிரத்து 108 போ் விண்ணப்பத்திருந்தனா். இவா்களில் 24 ஆயிரத்து 220 போ் தோ்வெழுதினா்.

திருச்சி மேற்கு வட்டத்தில் 1, 922 போ், திருச்சி கிழக்கு வட்டத்தில் 2, 326 போ், ஸ்ரீரங்கத்தில் 1, 352 போ், முசிறியில் 853 போ், மணப்பாறையில் 817 போ், லால்குடியில் 748 போ், துறையூரில் 879 போ் என மொத்தம் 8, 888 போ் தோ்வு எழுத வரவில்லை. வருகைப் பதிவு 73.15 சதவீதமாக இருந்தது.

தோ்வுப் பணிகளுக்கென 115 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். துணை ஆட்சியா் நிலையில் 7 பறக்கும் படை அமைக்கப்பட்டும் கண்காணிக்கப்பட்டது. வினா, விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் 39 நடமாடும் குழுக்கள் ஈடுபட்டன.

இக்குழுவில், துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஓா் அலுவலா், ஒரு வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா், அலுவலக உதவியாளா் இருந்தனா். 115 தோ்வுக்கூட கண்காணிப்பாளா்கள் தோ்வுப் பணிகளை ஒருங்கிணைத்தனா். அனைத்து மையங்களிலும் தோ்வானது வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மையத்துக்கும் 3 ஆண் காவலா்கள், 2 பெண் காவலா்கள் என தலா 5 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி