முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

67பார்த்தது
முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழகத்தில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஆகிய தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு இடத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை தலைமைக் கழகத்தின் அறிவுத்தலின்படி திருச்சி கிழக்கு மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளில் சிலை நிறுவி திறப்பு விழா சிறப்பாக எடுக்கப்பட்டது..

அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழாவின் நிறைவு நாளான இன்று திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் ஆயில்மில் அருகில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டு விழா திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், மாநகர செயலாளர் மு. மதிவாணன் முன்னிலையில், கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே. என். நேரு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, துணை மேயர் திவ்யா, பகுதி செயலாளர் ஓ. நீலமேகம், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி