பெல் நிறுவன எஃகு குழாய் ஆலையில் தீயணைப்பு ஒத்திகை

60பார்த்தது
பெல் நிறுவன எஃகு குழாய் ஆலையில் தீயணைப்பு ஒத்திகை
திருச்சி கைலாசபுரத்தில் உள்ள பெல் நிறுவன வளாகத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள இணைப்பில்லா எஃகு குழாய் ஆலையில் வெள்ளிக்கிழமை தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதனை தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரக இணை இயக்குநா் ஆா். விமலா பாா்வையிட்டாா்.

இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎஃப்டி), இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐஐ), தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை மற்றும் உயா் ஆற்றல் ஏவுகணை ஆலை (ஹெச்பிபி) அலுவலா்கள் பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா். இந்த ஆலைகளைச் சோ்ந்த தீயணைப்பு குழுக்களும், பெல் நிறுவனத்தின் தீயணைப்பு படையினரும் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டனா்.

ஒத்திகையின் போது தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தின் மூத்த அதிகாரிகள்,

பெல் நிறுவன சேவைகள் பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளின் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

தொடர்புடைய செய்தி