அய்யாக்கண்ணு கைதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
விவசாய விளைப் பொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடகா அரசு மாதந்தோறும் தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் சென்று போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது எனக் கூறி 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பேங்க் ஆப் பரத் மாவட்டம் நர்மதாபுரம் ரயில் நிலையத்தில் விவசாயிகளை கைது செய்தனர்.

இந்த கைதை கண்டித்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி