ஈரோடு: பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

53பார்த்தது
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ள அரசுகளில் ஒப்பந்தம் செய்து இந்த நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ராமலிங்கத்தின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் அலுவலகம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து திருச்சி - கல்லணை சாலையில் டாக்டர் தோப்பு அருகே ஜஸ்கான் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (JASCON) என்ற நிறுவனமானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக வில்சன் மைக்கேல் உள்ளார். மேலும் இந்த நிறுவனத்தில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சூரிய ஒளி மின்சாதனங்கள் மற்றும் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜஸ்கான் எனர்ஜி நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ராமலிங்கம் தன்வசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இனோவா காரில் வந்த 6 பேர் அடங்கிய குழுவினர், இந்த நிறுவனத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி