எசனைக்கோரையை சேர்ந்த திருச்சி மாவட்டம் லால்குடி ரஜினி தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி பாட்ஷா (எ) ராஜ்குமாருக்கும், கவிதா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு ரஜினிகாந்த் சார்பாக அவரது அண்ணன் சத்திய நாராயணா, மணமகன் வீட்டிற்கு இன்று வருகை தந்தார். பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு மாலைகள் அணிவித்து, சால்வைகள் போர்த்தியும் சத்யநாராயணா வாழ்த்தினார். திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கலீல், நிர்வாகிகள் கருப்பையா, ராயல் ராஜூ, கேபிள் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அளித்த பிரத்யேக பேட்டியில்", மணமகன் ராஜ்குமார் தனது திருமணத்திற்காக எனக்கு நேரில் வந்து அழைப்பு விடுத்தார். ஆனால், நான் அப்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் சென்றதால் அவர் திருமணத்திற்கு நேரில் வர இயலவில்லை. அதனால் தற்போது நேரில் வந்திருக்கிறேன் என்றார். வரும் எம்பி தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்ற கேள்விக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார்" என்றார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று நன்றாக வாழ வேண்டும். குழந்தைகள், பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.