மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெல் தொழிலாளர்கள்

76பார்த்தது
திருச்சி பெல் தொழிலாளர்கள் பெருமளவு வசித்துவரும் பெல்ஊரகத்தில் கால்நடைகள் மற்றும் தெருநாய்கள், குதிரைகள் தொந்தரவு அதிகரித்து காணப்படுவதால், கால்நடைகளால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாவதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கால்நடைகளால் மோதி பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றுவரும்நிலையில், கால்நடைகளை பிடித்து அடைக்ககோரி பொதுமக்கள் மற்றும் பெல்தொழிற்சங்கத்தினர் சார்பில் திருவெறும்பூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனுஅளித்திருந்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள், மாணாக்கர்கள் நலனில் அக்கறையில்லாத ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டும்காணாததுமாக இருந்துவந்தநிலையில், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் அலட்சிய திருவெறும்பூர் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்றையதினம் அண்ணா தொழிற்சங்கம், பெல் மஸ்தூர் சங்கம், ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட பெல் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்க பெல்நிறுவனம் தரப்பில் ஒத்துழைப்பு தந்து, இடம் ஒதுக்கீடு செய்தும் விளம்பர திமுகவின் நகராட்சி நிர்வாகம் அலட்சியம்காட்டிவருவதாகவும் குற்றம்சாட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி