கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை கூட்டம்

66பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை கூட்டம்
திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர மலைக்கோட்டை பகுதி 13, 13a , சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு தெருமுனை கூட்டம் இன்று வடக்கு ஆண்டார் வீதியில் நடைபெற்றது
வட்ட கழகச் செயலாளர் சங்கர், சரவணசெல்வன் தலைமை தாங்கசிறப்பு அழைப்பாளர்கள் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திமுக செய்தி தொடர்பாளர் இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா.
மாநகரகழக செயலாளரும் மண்டல தலைவருமான மு. மதிவாணன்,
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது
கலைஞருடைய நூற்றாண்டை முன்னிட்டு 100 கலைஞர் அவர்கள் இன்றும் நம்மை வழி நடத்துகிறார் என்பதற்காக தான் 2016 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை என்று வந்த பொழுது இந்த புதிய கல்விக் கொள்கையை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று அவர் போட்ட அந்த விதைதான் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் நம்முடைய மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு கல்விக் கொள்கையை தனிநபர் ஒரு நபர் ஆணையத்தின் மூலமாக இன்னைக்கு அந்த ஆவணத்தையும் இன்னைக்கு ஒரு பெற்றிருக்கின்றார் அது மட்டுமல்ல நுழைவுத் தேர்வு என்பதை இருக்கக்கூடாது என்பதை ஒழித்துக் கட்டியவர் கலைஞர் என உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி