கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

53பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த வாக்காளப் பெருமக்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி அறிவிக்கும் பொதுக் கூட்டம் திருச்சி இ. பி, ரோட்டில் நடைபெற்றது.

வட்டக் கழகச் செயலாளர்கள் மனோகரன், சுப்பிரமணி தலைமை மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் பாபு, சிறப்புரை கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே. என். நேரு அவர்களும், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இப்பொதுக் கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், செந்தில், துணை மேயர் திவ்யா, மாநகரத் துணைச் செயலாளர் சந்திரமோகன், ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி