திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்ட தயாராக இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு ஆண் பயணி கொண்டு வந்த உடமையை சோதனை செய்ததில் அவரிடமிருந்து 8,000 ஆஸ்திரேலியா டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4,36,000 என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.