திருச்சி பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு 681காளைகள் பங்கேற்பு

51பார்த்தது
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 681 ஜல்லிக்கட்டு காளைகளும் 349 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர் இதில் 87 பேர் காயம்.


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி  மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 681ஜல்லிக்கட்டு காளைகளும் 349மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஜல்லிகட்டு போட்டியானது காலை 8. மணிக்கு துவங்கியது.
வாடிவாசல் வழியாக களைகள் சீறி பாய்ந்தன.
அடங்காத காளைகளுக்கும் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர வாகனம், டிவி, பீரோ, ட்ரெஸ்ஸிங் டேபிள் சைக்கிள், தங்ககாசு, வெள்ளி காசு, ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மாலை 4. 50க்கு போட்டி நிறைவுற்றது.

இதில் 13காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற வீரருக்கு டூவீலர் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியின் போது 87 பேர் காயமுற்றனர். 15 பேர் மேல்சிகிச்சை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி