சமயபுரம் அருகே உள்ள கோணலைப் பகுதியில் இருந்து லோடு வாகனத்தில் ஐந்து கட்டிட தொழிலாளிகள் மற்றும் காங்கிரீட் கலவை மெஷினோடு சமயபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருங்கலூர் அருகே வந்த போது லோடு வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிமென்ட் கலவை இயந்திரமானது பக்கவாட்டில் பின்னால் வந்த மற்றொரு லாரி மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய லோடு வாகனம், சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணித்த ஐந்து கட்டிட தொழிலாளிகள் காயமடைந்தனர்.