திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவுக்கு 11 வது விமான சேவை

68பார்த்தது
திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவுக்கு 11 வது விமான சேவை
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு புதிய 11வது சர்வதேச விமான சேவை நேற்று (ஜனவரி 2) முதல் துவங்கியது. இந்த விமான சேவை வாரநாட்களான வியாழன் மற்றும் ஞாயிறுகிழமைகளில் என வாரம் இரு நாட்களில் இயங்கும் வகையில் துவக்கப்பட்டுள்ளது. 

இந்த விமானம் திருச்சியில் இருந்து காலை 6:05 மணிக்கு புறப்பட்டு சவுதி அரேபிய நேரப்படி காலை 9:10 மணிக்கு தமாம் சென்றடையும். மறுமார்க்கமாக தமாம் கிங் பகத் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5:00 மணிக்கு திருச்சி வந்தடையும். நேற்று (ஜனவரி 2) துவங்கிய திருச்சி-தமாம் இடையிலான முதல் விமானத்தில் 123 பயணிகள் பயணித்தனர்.

தொடர்புடைய செய்தி