தமுமுக சார்பில் வார்டு நிர்வாக சீரமைப்பு பொது குழு கூட்டம்

53பார்த்தது
தமுமுக சார்பில் வார்டு நிர்வாக சீரமைப்பு பொது குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு மாவட்டம் அண்ணாநகர் பகுதி 51 வது வார்டு மற்றும் 52 வது வார்டு நிர்வாக சீரமைப்பு பொது குழு கூட்டம் தமுமுக செயலாளர் துபை காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் வழ ஆலம் , மமக பகுதி செயலாளர் தென்னூர் சதாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், IPP மாநில துணை செயலாளர் முகமது ரபீக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

51வது வார்டு மற்றும் 52 வது வார்டு நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய பட்டனர்.

இக்கூட்டத்தில் மமக மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பஜ்லூர் ரஹ்மான், IPP மாவட்ட பொருளாளர் சிராஜ்தீன், SMI மாவட்ட துணை செயலாளர் இப்ராஹிம், முன்னாள் மமக பகுதி செயலாளர் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி