தமிழ்நாடு மின் ஊழியர் சார்பில் காத்திருப்பு போராட்டம்

76பார்த்தது
தமிழ்நாடு மின் ஊழியர் சார்பில் காத்திருப்பு போராட்டம்
அரசாணை 100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளுக்கு கலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக காலி பணி நேரம் இருப்பிட கோரியும் வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள ரீ டிப்லோமெண்ட், டிஸ்கண்டினியூட் உத்தரவுகளை திரும்ப பெற கோரியும், G. O 100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளுக்கு அலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை கைவிடக் கோரியும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை வழங்கிட கோரியும் மீன் விபத்தில் உயிர் இழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணை வாரிய உத்தரவை வெளியிடக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் பகுதி நேர ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி