திருச்சி மகளிா் தனிச் சிறையில் காலியாகவுள்ள துப்புரவுப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பணியிடத்திற்கான கல்வி தகுதியாக தமிழில் நன்கு எழுதுவதற்கும், பேசுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 1. 07. 2023 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயதுக்குள் இருக்க வேண்டும். ஊதிய விகிதம் ரூ. 15700 - 58100 ஆகும். தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட வகுப்பினா் மட்டும் தங்களுடைய ஆவணங்களின் நகல்களுடன் 31. 10. 2023ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.