10 ஆம் தேதி திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்

50பார்த்தது
10 ஆம் தேதி திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல்
முடிந்து தேர்தல் நடத்தை
விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது