திருச்சி எம்பி துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு

55பார்த்தது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் கூறுகையில்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி விமான நிலைய இயக்குனர் , வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் திருச்சி விமான நிலைய ஓடுதள பாதை விரிவாக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கலந்துரையாடி பேசப்பட்டது‌

திருச்சியில் புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு ஜீன் 11 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆனால் பெரிய விமானங்கள் தரையிரங்கும் அளவிற்கு ஓடுதள பாதை இன்னும் விரிவுப்படுத்தப்படவில்லை.

ஓடுதள பாதையை விரிவுப்படுத்தினால் தான் கூடுதல் விமானங்கள் மற்றும் பெரிய விமானங்கள் இயக்கப்பட முடியும், பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எனவே ஓடுதள பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பயணிகள் உடன் வருபவர்களுக்கு கழிவறை வசதி போதுமான வகையில் இல்லை என புகார்கள் வந்தது. கழிவறை வசதி அமைத்து தர வேண்டும் என்பது குறித்தும் கூறினேன் என துரை வைகோ தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி