திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே. என். நேரு உரையாற்றினார்.
பள்ளிக்கல்வித்துறையை மிக நேர்த்தியாக நடத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் மகேஸ்க்கு வாழ்த்துக்கள். ஒரு இலாகா வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இலாகாவை நடத்துவதில் அமைச்சர் திறமை இல்லை என்றால் வெற்றி பெற முடியாது. அமைச்சர் மகேஸ் திறமையாக நேர்த்தியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
நாங்க எல்லாம் ஜெயிச்சதுக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் (ஆசிரியர்கள்) என்பது எங்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் நான் இங்கே கூறினால் பேப்பர் காரர்கள் எல்லாத்தையும் எழுதி விடுவார்கள். கண்டிப்பாக உங்கள் உழைப்பு வீண் போகாது தலைவர் முதல்வர் உங்களுடன் எப்போதும் இருப்பார்.
நான் பியூசி வரை படித்தவன். ஆனால் நான் படிக்க முடியாவிட்டாலும் என் தம்பி தங்கைகளை பி ஜி முதுகலை பட்டங்களை படிக்க வைத்தேன். இன்ஜினியரிங் கல்லூரியில் என் தம்பியை சேர்க்க சென்ற பொழுது அப்பொழுது எம்ஜிஆர் முதல்வர்
திமுக காரன் நீ எங்க இங்க வந்த என கேட்டு விரட்டப்பட்டவன்.
அதற்காகவே நான் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதன் மூலம் வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்றவன். தற்போது 72 வயதாகி விட்டது கல்வி கற்பதற்கு
காலம் கடந்து விட்டது என அமைச்சர் கே. என். நேரு பேசினார்