மோட்டார் வாகன ஆலோசகர் சங்கத்தினர் மனு

76பார்த்தது
தமிழ்நாட்டில் மோட்டார் வாகன தொழில் சார்ந்த பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்று கொடுக்கின்ற தொழிலாளர்கள் குறைந்தபட்சம் இருபது லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த மோட்டார் வாகன தொழிலை சார்ந்து இருக்கிறோம். தற்போது போக்குவரத்து அலுவலகங்களில் புதிய மாற்றங்கள் மற்றும் ஆன்லைன் அபராதத்தில் உள்ள புதிய நடைமுறைகளால் எங்களது தொழில் சார்ந்தவர்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பெயர் மாற்றம் செய்ய பழைய வாகன உரிமையாளரின் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் கேட்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பழைய வாகனத்தை வாங்கி வைத்திருக்கும் உரிமையாளர் யாரும் பெயர் மாற்றம் செய்ய முன் வருவதில்லை.
தற்போது உள்ள அதிகபட்ச ஹெல்மெட் அபராதம் 1000 ரூபாய், ஒரு சாமானிய மக்களின் மூன்று நாள் குடும்ப செலவாகும். வாகனத்திற்கு அபராத தொகை பதிவிடும் போது வாகனத்தின் எண் சரியாக தெரியாத பட்சத்தில் அபராதம் வேறு ஒரு வாகனத்திற்கு தவறுதலாக விதிக்கப்படுகிறது இதனை நீக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், திருச்சி மாவட்ட ராக் சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் பல்வேறு சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி