11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அறிவிப்பு
ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளில் தமிழக முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மாத ஊதியமாக ரூபாய் 12ஆயிரத்து 500 பெற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், திமுக தனது தேர்தல் அறிக்கை 181 ல் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்ன வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி,
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேசு ராஜா முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மனோகரன் இணை செயலாளர்கள் சசிகுமார், புவனேஸ்வரன் துணைத் தலைவர்கள் காந்திநாதன், ரூஸ்வெல்ட், மகளிர் அணி செயலாளர் ஸ்டாலின் டாரத்தி, செல்வராணிஉள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.