கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் " திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா" நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கலைபண்பாட்டுத்துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் திருச்சி சங்கமம் நம்ம திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்து. பார்வையிட்டு, மாவட்ட கலைமன்ற விருதுகளை வழங்கினார்.
ஊரு நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும் தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டாடுவதற்கும் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தவும் சங்கமம் நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நடத்திட தமிழ்நாடு அரசால் உத்தரவிட்டப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி சங்கமம் நம்ம ஊர் திருவிழா இன்று 26. 07. 2024 முதல் 27. 07. 2024 வரை இரண்டு நாட்கள் மாலை 5. 00 மணி முதல் இரவு 10. 00 மணி வரை திருச்சி புனித ஜான் வெஸ்டிரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.