லால்குடி: சிறுநீரக கோளாறால் ஒருவர் தற்கொலை

76பார்த்தது
லால்குடி: சிறுநீரக கோளாறால் ஒருவர் தற்கொலை
லால்குடி அருகே உள்ள கபிரியேல்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம் வயது 57. சிறுநீரகக் கோளாறு காரணமாக அதற்கு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 12ஆம் தேதி அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி