முசிறி அருகே தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் நேற்று இரவு அருகில் உள்ள சுவீப்பர் காலனியில் வசிக்கும் மோகன் வீட்டிற்கு சென்று அவரது மகன் மணிவண்ணன் எங்கே என்று குடும்பத்தினரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் பிரவீனிடம் சென்று அவங்க கிட்ட ஏன் பிரச்சனை செய்கிறாய் வீட்டுக்கு போ என்று கேட்டதற்கு இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்ட நிலையில் பிரவீன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரின் முகத்தில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் என்ன செய்வது என்று தெரியாமல் விஜயகுமாரின் உறவினர்கள் தன்னை அடித்து விடுவார்களோ என பயந்தும், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என நினைத்து வீட்டிற்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.