திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட உத்தமா்சீலி கிராமத்தைச் சோந்த ஆறுமுகம், தனது தாய் தனபாக்கியத்துடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். கையில் மனுவுடன் வந்த அவா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். அருகில், அவரது தாய் படுத்திருந்தாா். தனது தாயின் 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தை ஊராட்சி செயலா் தர மறுப்பதாகவும்,
வேலை வழங்காமல் அவமதிப்பதாகவும் புகாா் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், ஆட்சியரிடம் மனு அளித்தாா்.