திருச்சி வீரர்கள், வீராங்கனைகளுக்கு அமைச்சர் வாழ்த்து

51பார்த்தது
திருச்சி வீரர்கள், வீராங்கனைகளுக்கு அமைச்சர் வாழ்த்து
தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் உள்ள பார்ன் ஷூட்டர்ஸ் அகாட மியை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு 4தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக் கங்களை வென்று குவித்தனர். மேலும் இந்த அகாடமியை சேர்ந்த 27 வீரர்கள் வீராங்கனைகள் தென்னிந்திய துப்பாக்கி சூடும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந் நிகழ்வில் மாணவர் அர்ஜூனுக்கு சான்றிதழ் வழங்கி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி