லாரி - சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

66பார்த்தது
மதுரையில் இருந்து காய்கனி ஏற்றிய சரக்கு வேன் ஒன்று பல்வேறு இடங்களிலும் காய்கனியை இறக்கி விட்டு அதிகாலை மணப்பாறை ஆஞ்சநேயர் நகர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் தருமபுரியை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட நிலையில் திடீரென சரக்கு வேனில் தீப்பிடிக்கவே உடனே அருகில் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மற்றும் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை உடனடியாக அணைத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் வெங்கடேஷை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி