திருச்சி திருச்சி சிவா எம்பி பிறந்தநாளையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் இலக்கிய வேள் விருதை கலைமாமணி, பேராசிரியா் கு. ஞானசம்பந்தனுக்கு திருச்சி சிவா எம்பி வழங்கிப் பேசினாா். ஞானசம்பந்தன் மகிழ்வுரையாற்றினாா். நிகழ்வில் திரைக்கலைஞா் சண்முகராஜன், கவிஞா் நெல்லை ஜெயந்தா, கவிஞா் நந்தலாலா, திருச்சி நகைச்சுவைச் மன்றச் செயலா் க. சிவகுருநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.