திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

577பார்த்தது
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும்,
வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்தும் இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், வாக்குச்சீட்டு முறையினை நடைமுறை படுத்த வலியுறுத்தியும் தமிழக முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியில் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணா சாலை அருகே மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட்லாரன்ஸ் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன், சக்திஆற்றலரசு ஆகியோர் தலைமையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை ஒருங்கிணைப்பில்,
திருச்சி-கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன். முருகேசன் ஆகியோர் முன்னிலையில்
நடைபெ ற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் புதுவை பாவாணன் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி