லால்குடி அருகே உள்ள திண்ணியம் பகுதியில் அனுமதி இன்றி பெட்ரோல் டீசல் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது திண்ணியத்தில் உள்ள மளிகை கடை ஒன்றில் குமார் என்பவர் எளிதாக தீப்பற்றக்கூடிய பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருட்களை அனுமதி இன்றி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து எட்டு லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.