திருச்சியில் மமக தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறுகையில். ம. ம. க சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள் 100 இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும். 10 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போதை பொருள் விவகாரத்தில் இன்னும் அதிகமாக விழிப்புணர்வையும், சட்ட நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி உரையாற்றினார். இது அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு எதிராகவும், இந்தியாவின் வேற்றுமையில் ஒஎறுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வஃக்பு நிலங்களை ஆக்கிரமிக்க வஃக்பு சட்டத்தை கொண்டு வந்தார்கள். எதிர்ப்பின் காரணமாக அது நாடாளுமன்ற கூட்டிக்குழுவிற்கு அனுப்பபட்டுள்ளது. இந்த நிலையில் மோடி மதச்சார்பற்ற சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார். அந்த உரை பிரதமரின் உரையாக இல்லாமல் அரசியல் கட்சி தலைவரின் உரையை போல் உள்ளதாக சில பத்திரிக்கைகள் விமர்சனம் செய்துள்ளன. இந்தியா கூட்டணி இதனை எதிர்க்க வேண்டும், எதிர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என பேசினார்.