திருச்சி ரெயில் நிலையத்தில் காரைக்குடி பாசஞ்சர் ரெயில் பெட்டியில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். இதையடுத்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு உள்நோயாளியாகஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெயில்வே எஸ். ஐ திருமலை ராஜா வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இறந்தவரின் இடது கையில் வள்ளி என்று பச்சை குத்தியுள்ளார். கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் வாடாமல்லி கலரில் சேலை அணிந்துள்ளார். வலது கையில் பூக்கோலம் பச்சை குத்தியுள்ளார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு
கூறியுள்ளனர்.