பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ

59பார்த்தது
பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த துரை வைகோ
திருச்சியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக-வின் பொதுச்செயலாளர் துரை வைகோ அவர்கள் வெற்றி பெற்றதையடுத்து, திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பீமநகர், மார்சிங் பேட்டை, காஜாமலை, பஞ்சபூர், கிராப்பட்டி, கருமண்டபம், பிராட்டியூர், எம்ஜிஆர் நகர், பொன்னகர், மிளகுபாறை, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடம் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்

இந்த நிகழ்வில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு மத்திய மாவட்டச் செயலாளர் திரு. வைரமணி அவர்கள், மாநகர செயலாளர் திரு. அன்பழகன் அவர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி