திருச்சியில் மருத்துவர்கள் அமைதி பேரணி

52பார்த்தது
திருச்சியில் மருத்துவர்கள் அமைதி பேரணி
மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா மருத்துவ சங்கம் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் அமைதி பேரணி நடத்தினர். திருச்சி எம் ஜி ஆர் சிலை பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பெண் மருத்துவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெண் மருத்துவரை படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் நடந்து சென்றனர். 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஊர்வலமாக நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒன்று கூடினர். மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். பெண் மருத்துவர்களுக்கு மருத்துவ வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென பேராசிரியர்களும் மூத்த மருத்துவர்களும் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து பேசினர்

தொடர்புடைய செய்தி