திருச்சியில் திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

168பார்த்தது
திருச்சியில் திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்று k திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம். பி தலைமையில் திமுக மகளிர் அணி & திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில், கனிமொழி எம். பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர் இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி