மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாநகராட்சி 17, 19, 20 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சாக்கடை கலந்த கழிவு நீர் குடிநீருடன் கலந்து அதனை பொதுமக்கள் குடித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மஞ்சள்காமாலை, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பலர் இறந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்குக் காரணமான அரசையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்து, இன்று திருச்சி, மரக்கடை, எம்ஜிஆர் திடலில், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ப. மோகன் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் முன்னிலையில், நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பராமரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசை கண்டித்தும், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தொடர்புடைய செய்தி